முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார, கொரோனா பாதிப்பில் மரணம்

🕔 February 14, 2021

முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொகுபண்டார கொரோனா தொற்று காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை 80ஆவது வயதில் உயிரிழந்தார்.

தொற்று நோயியல் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.

முன்னாள் சபாநாயகர் இந்த மாத தொடக்கத்தில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

டபிள்யூ. ஜே. எம். லோகுபந்தரா சபாநாயகர் பதவி மட்டுமன்றி, பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments