பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது
![Dollar and euro - 012](http://puthithu.com/wp-content/uploads/2015/11/Dollar-and-euro-012-1024x681.jpg)
இலங்கைப் பெறுமதியில் ஆறு கோடியே 60 இலட்சத்து 76,213 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டுப் பணத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த நபரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக, டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரிடமிருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
FZ 551 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர், இன்று திங்கட்கிழமை முற்பகல் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர், ஸ்டெலிங் பவுண், ரியால் மற்றும் டினார் உள்ளிட்ட மேலும் பல நாடுகளின் பணம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட நாணயங்களில் 184,750 அமெரிக்க டொலர்கள், 183,400 யூரோ, 16,000 பிரித்தானிய பவுன், ஐக்கிய அரபு இராஜ்ஜிய திர்ஹம் 11,900, டென்மார்க் நாணயம் 67,000, சுவிஸ் பிராங் 1200, ஓமான் ரியால் 1125 என்பன அடங்கியிருந்ததாகத் தெரியவருகிறது.