சம்மாந்துறையில் 12 கலைஞர்கள், சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு

🕔 February 12, 2021

– ஐ.எல்.எம் நாஸிம் –

ம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருதளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச கலாசார அதிகாரசபை இணைந்து இந்நிகழ்வினை நடத்தின.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம். லத்தீப் கலந்து கொண்டார்.

நாடகத்துறை (இலக்கியம்) ஏ.எல்.எம் யாசின், சுவர் ஓவியக் கலைஞர் எஸ்.எம் நிஸார், கூத்து வாய்மொழிப்பாடல் இளையதம்பி இராசநாயகம், இலக்கியம் என். பிரதாப், ஆய்வுத்துறை எச்.எம் அன்வர் அலி, சித்திரம் எம் சசிகுமார், கவிதை எம்.எச் அலியார், தாளவாத்தியம் எம்.எஸ். றிஸ்கான், அறிவிப்பு, பாடல்
(பல்துறை) எ. அகமட், கவிதை, நாடகத்துறை (பல்துறை) எ.பி சம்சுனா, இசைத்துறை பாடகர் ஏ.எம் அப்துல் றஸுல், கவிதை (பல்துறை) எம் .ஐ. முஹம்மத் ஹனீபா என, 12  கலைஞர்களுக்கு சுவதம் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை பேணி நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், சம்மாந்துறை  பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எம்.வை. நெளசானா என பலரும் கலந்து கொண்டனர்.

Comments