ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றமத்துக்கு செல்வோம்: பேராயர் மெல்கம் ரஞ்சித்

🕔 February 11, 2021

ஸ்டர் தின தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியொன்றை தான் ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்;

“சில விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக எமக்கு இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விரைவில் குறித்த பிரதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும். அப்பொழுது எமக்கு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.

Comments