103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம்

🕔 February 8, 2021

கொரோனா தொற்று காரணமாக 103 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகிறது.

காலி – கிரிமங்கொட பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்க எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, அவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருந்தமை தெரிய வந்துள்ளதாக காலி மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரியந்த டி சில்வா கூறியுள்ளார்.

அதன்படி, அவரின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்