
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஏற்பட்டமையினை அடுத்து, அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், அதன் முடிவினை இன்று திங்கட்கிழமை பெற்றார்.
இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவரது அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமைச்சின் செயலாளர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியமை காரணமாக, வர்த்தக அமைச்சர் பண்டுல குணவர்தனவும் இன்று திங்கட்கிழமை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் முடிவு இன்று பிற்பகல் கிடைக்கும்.



