தலைப்புச் செய்திகள்

இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

லங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போயிருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர் கடந்த 03ஆஅம் திகதி இலங்கை வந்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, கொரோனா தொற்றுக்குகுள்ளாகி இருந்தமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவர் 13 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரை இங்கிலாந்து அணியுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.