காகில்ஸ் ஃபுட் சிற்றி கிளையில், துப்பாக்கிதாரர்கள் கொள்ளை முயற்சி: சிசிரிவி வீடியோ வெளியானது

🕔 January 4, 2021

த்தளையிலுள்ள காகில்ஸ் ஃபுட் சிற்றி விற்பனை நிலையக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளை முயற்சி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிசிரிவி வீடியோ காட்சியில், மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் இருவர், குறித்த நிறுவனத்துக்குள் நுழைந்து, அங்குள்ள காசாளரை அச்சுறுத்துகின்றமை தெரிகின்றது.

இது தொடர்பில் காகில்ஸ் ஃபுட் சிற்றி நிறுவனத்தின் முகாமை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஊழியர்களோ, வாடிக்கையாளர்களோ இந்த சம்பவத்தில் எவ்வித காயங்களுக்கும் ஆளாகவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் -உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக, அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்படி விற்பனை நிலையம் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முகாமைத்துவம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிரிவி வீடியோ

Comments