தென்கிழக்கு பல்கலைக்கழகம்: இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு நாளை ஆரம்பம்

🕔 December 21, 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 07ஆவது சர்வதேச ஆய்வரங்கு, பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நாளை செவ்வாய்கிழமை இணைய வழியாக நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்த ஆய்வரங்கை, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் ஒருங்கிணைக்கின்றார்.

‘இஸ்லாமிய அறிவியல் மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக, மனித வள அபிவிருத்தியை மேற்கொள்வதில் நடுநிலையான அணுகுமுறையை கையாளுதல்’ எனும் தொனிப்பொருளில், இவ்வாய்வரங்கு நடைபெறவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலேசியாவின் மலாயா பல்கலைக்கழக – இஸ்லாமிய கற்கைகள் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் றைஹான ஹாஜி அப்துல்லாஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

காலை 7.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் 66 ஆய்வுக் கட்டுரைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

ஆய்வரங்கின் செயலாளராக பீடத்தின் சமூக விஞ்ஞானங்களுக்கான விரிவுரையாளர் சுஹீரா சபீக், பொருளாளராக அறபு மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எப்.எஸ். பர்வீன் ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்