இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு

🕔 December 18, 2020

லங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியா பல நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

முதலாவது விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைவது இரண்டாவது நாட்டில் இன்னொரு யுத்தம் இடம்பெறாததை உறுதி செய்வது என தெரிவித்துள்ள சரத்வீரசேகர; “மூன்றாவது வடக்கில் முன்னர் வசித்தவர்களை மீள் குடியேற்றம் செய்வது” என தெரிவித்துள்ளார்.

இந்தியா இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய உடன்படிக்கை தற்போது செல்லுபடியற்றது என கூறியுள்ள அவர்; “தற்போது அது நடைமுறையில் இல்லையென்றால், மாகாணசபைகளுக்கும் அது பொருந்தும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மூலமாகவோ அல்லது அரசியலமைப்பின் மூலமாகவோ நாட்டை யாரிடமும் கையளிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்