முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 December 16, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமாகிய அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள், நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இருவரையும் நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்