திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்

🕔 November 9, 2015
Tilak marapana - 01மைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை ராஜினாமா செய்தமையினை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் சாகல ரத்னாயக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர் என்பதும், குறிப்பிடத்தக்கது.

டி.எம். சுவாமிநாதன் தேசிய பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட்டவராவார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன இன்று தனது பதவியினை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

நுகேகொடையிலுள்ள தனது வீட்டில் வைத்து இன்று திங்கட்கிழமை காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் தனது ராஜினாமா தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் மாரப்பன இதன்போது கூறியிருந்தார்.

எவன் கார்ட் சர்சையில் அமைச்சரின் பெயரும் கசிந்துள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்