கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின

🕔 November 24, 2020

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க மொத்தமாக 94 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளனர்.

கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண், சியம்பலாபே பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஆண், கொழும்பு 15இல் வசிக்கும் 73 வயதுடைய பெண் மற்றும் பண்டாரகம – அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஆகியோரே மரணித்துள்ளனர்.

இதேவேளை, இன்று மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதி வரை, நாட்டில் 20,795 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 14,962 பேர் குணமடைந்துள்ளனர்.

Comments