திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு

🕔 November 19, 2020

ரசாங்க பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது.

தரம் 06 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

எவ்வாறயினும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது.

கடந்த ஒன்பதாம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments