காலியாகவுள்ள ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம்: பொதுத் தேர்தல் நடந்து 100 நாட்கள் கடந்தும் பரிதாபம்

🕔 November 17, 2020

பொதுத் தேர்தல் நடைபெற்று 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடம் இதுவரை நிரப்பப்படவில்லை.

கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றதை அடுத்து, வரலாற்றில் எப்போதுமில்லாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சி எதுவித ஆசனங்களையும் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியடைந்தது.

ஆயினும், தேசியப்பட்டியல் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.

இருந்த போதும் அந்த ஆசனத்துக்கு இதுவரை எவரையும் அந்தக் கட்சி பரிந்துரைக்கவில்லை.

அதனால் பொதுத் தேர்தல் நடைபெற்று 100 நாட்கள் கடந்த நிலையிலும், நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆசனம் வெற்றிடமாகவே இருந்து வருகிறது.

இதேவேளை, ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’க்கு கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடமும் இதுவரை நிரப்பப்படவில்லை.

‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’க்கு தேசியப்பட்டில் மூலமாக ஓர் ஆசனம் கிடைத்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்