கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிப்பு

🕔 November 17, 2020

நாட்டில் இதுவரயில் கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

இறுதியாக பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Comments