பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டால், அமைதியாக ஆட்சி ஒப்படைக்கப்படும்: ‘ட்ரம்ப்’பின் கட்சி எம்.பி தெரிவிப்பு

🕔 November 7, 2020

மெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதிப்படுத்தப்பட்டால், நிச்சயமாக ஆட்சியை ஒப்படைக்கும் நடைமுறைகள் அமைதியான முறையில் நடக்கும் என்று, ஆளும் குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மிட்ச் மெக் கொனெல் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய அவரிடம், ஆட்சிப்பொறுப்பு ஒப்படைப்பு தொடர்பாக தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த அவர்; “நிச்சயமாக. 1792 முதல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி ஒப்படைப்பு நடைமுறை அமைதியாகவே நடந்துள்ளது” என்று கூறினார்.

இதேவேளை, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனின் வீட்டுக்கு மேலாக விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நவம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவரது வீடு – டெலவேர் மாகாணம் வில்மிங்டனில் உள்ளது.

அவர் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவரது வீட்டை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வான் பரப்பில் விமானங்கள் பறக்க ரகசிய பாதுகாப்பு படையின் வேண்டுகோளின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

நவம்பர் 04 அன்று இது – மூன்று கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்