கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

🕔 November 6, 2015
Gotta + Rajitha - 012
மு
ன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், கோட்டாவை கைது செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதாக அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர்கள் பலரும் தமது கருத்துக்களை கூறியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த அமைச்சரவை கூட்டத் தொடரின் போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும் ராஜித சேனாரத்ன இதன்போது விபரித்தார்.

Comments