கொரோனா வைரஸ்; ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இல்லை: ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும்

🕔 October 17, 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்க கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என கூறியுள்ள அவர், இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் ஆயுட் காலம் தொடர்பில் வினவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்;

“தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் மூன்று வாரத்துக்குள் குணமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது மனிதனின் உடலுக்குள் மாற்றமடைகின்றது. விசேடமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு முக்கிய பங்களிக்கின்றது.

எப்படியிருப்பினும் கொரோனாவுக்கு உறுதியான மருந்து அல்லது தடுப்பூசி இல்லாத போதிலும் எங்கள் சுகாதார பிரிவுகளினால், நோயாளிகளின் நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து குணமாக்க முடியும்.

உதாரணமாக இருமல் உள்ள கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்படுகின்றார் என்றால், அவரது நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து அவரை குணப்படுத்த கூடிய சக்தி எங்கள் வைத்தியர்களிடம் உள்ளது. அதற்கமைய குணமடைந்த நோயாளிகள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறுவார்கள்.

விசேடமான இந்த கொரோனா வைரஸ், இருமல், தும்மலின் போது பரவுகின்றது. மேலும் யாராவது ஒருவரின் எச்சில் பட்ட இடத்தில் நின்றால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.

அதனால் அவதானமாக பணிக்கு செல்ல வேண்டும். அத்துடன் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்