ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை

🕔 August 10, 2020

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மாினத்துள்ளார்.

கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயாகமகே, வஜிர அபேவர்த்தன உட்பட தனது பெயரும் பிரேரிக்கப்பட்டுள்ளன என்று அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் பிரிந்து சென்று, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஐ.தே.கட்சி – எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை.

குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க – தேர்தலில் தோல்வியடைந்தமை கட்சிக்குள்ளும் வெளியிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் தீர்மானித்துள்ளார்.

Comments