அரசியலில் பக்கச் சார்பாக நடந்து கொண்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர்: ஊடகங்களிடம் விரளுவதாக விசனம்

🕔 July 8, 2020
குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரிய பள்ளி வாசல் தலைவர் – வட்டமிடப்பட்டுள்ளார்

– அஹமட் –

னியொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பக்கச் சார்பாக நடந்து கொண்டமை தொடர்பில், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அந்த சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அனூன் என்பவர் விரண்டு திரிவதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள் கலந்து கொண்டு, குறித்த வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும், அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான சட்டத்தரணி அனூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நான்கு அரசியல் கட்சிகள் சார்பாக, நான்கு வேட்பாளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் நிலையில், ஒரு வேட்பாளருக்கு சார்பாக அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் செயற்பட்டமை தொடர்பில், பாரிய கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அனூன் என்பவரை ‘புதிது’ செய்தித்தளம் – தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதும், அவர் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரை ஊடகவியலாளர் றிப்தி அலி தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்ட போது, தொலைபேசி மூலம் பதிலளிக்க முடியாது என்றும், விரைவில் மேற்படிவிவகாரம் தொடர்பில் தான் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நேர்மையற்ற முறையில், பக்கச் சார்பாக அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அனூன் செயற்பட்டு விட்டு, ஊடகங்களை எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு விரண்டு திரிகின்றமை கேவலமான செயற்பாடாகும் என, இது குறித்து ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரின் குரல் பதிவு

தொடர்பான செய்தி: வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு

Comments