ஹஜ்: வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

🕔 June 23, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இவ்வாண்டு ஹஜ் யாத்திரைக்கு வெளிநாட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என செளதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

அதே சமயம் குறைந்த அளவில் உள்நாட்டு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செளதி கூறி உள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலிருந்தும் குறைந்தது 20 லட்சம் பயணிகள் மக்கா மற்றும் மதினாவுக்கு ஹஜ் யாத்திரையை மேற்கொள்வார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக ஹஜ் பயணம் முழுமையாக தடை செய்யப்படும் என கருதப்பட்ட சூழலில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் யாத்திரிகர்களை அனுமதித்தால்தான், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும் என செளதி கூறுகிறது.

இதுவரை செளதியில் 1,61,005 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; குறைந்தது 1307 பேர் பலியாகி உள்ளனர்.

அந்நாட்டில் கடந்த வார இறுதியில்தான் தேசிய அளவிலான சமூக முடக்கம் தளர்த்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்