ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை

🕔 June 17, 2020

நாடாளுமன்றத் தேர்தல் பிரசார காலங்களின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை காட்டியமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள், கட்சிகள் அல்லது சுயாதீன வேட்பாளர்கள் உட்பட எவரும் தனது பெயர், பதவி மற்றும் புகைப்படத்தை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய விரும்பவில்லை என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments