
அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 04 ஆம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.



