ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

🕔 May 28, 2020

திர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊடரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த விளக்கத்தினையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு;

  • மே 31 ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
  • ஜுன் 01 திங்கள் முதல் ஜுன் 03 புதன் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
  • ஜுன் 04 வியாழன் மற்றும் ஜுன் 05 வெள்ளி ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
  • ஜுன் 06 சனி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
  • கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

Comments