இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு

🕔 May 17, 2020

லங்கையை ‘ஈழம்’ என பிரித்தானியாவிலிருந்து இயங்கும் ‘த காடியன்’ எனும் இணையத்தளம் குறிப்பிட்டமைக்கு, இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

‘த காடியன்’ இணையத்தளம் நேற்று முன்தினம் 15ஆம் திகதி ‘Travel quiz: do you know your islands, Man Friday?’ என்ற கேள்வி – பதில் பக்கத்தில்; ‘ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர் என்ன?’ எனக் கேட்கப்பட்டிருந்தது.

அந்த கேள்விக்கான சரியான பதில்களில் ஒன்றாக ‘இலங்கை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுவே சரியான பதிலாகவும் அமைந்திருந்தது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் (L.T.T.E) எனவும் அதில் விபரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கார்டியன் இணையத்தள ஆசிரியருக்கு இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் கடிதம் ஒன்றை அனுப்பி, ‘ஈழம்’ என்ற உள்ளடக்கத்தை அகற்றுமாறு கேட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்