நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு

🕔 May 1, 2020

ஜுன் 20 ஆம் திகதியன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்ரி குணரத்ன இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளர், சட்ட மா அதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்பதால், அதனை ரத்துச் செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் தேர்தலை நடத்தாமல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் திகதி சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்