“சஹ்ரான்களும் சஹ்ரானை ஏவியோரும் செய்த ஈனச் செயலுக்காக, நீர் எம்மை மன்னிப்பீராக”

🕔 April 21, 2020

– பர்ஸான். ஏ.ஆர் –

ன்னை மர்யமின் மகன் தூதர் ஈஸா நாளை உலகிற்கு மீள்வருகை செய்யவிருக்கின்றார், இன்ஷா அல்லாஹ்.

நாளை நான் அவர் இரு கரங்களையும் பற்றி; “அல்லாஹ்வின் தூதரே,
சஹ்ரான்களும் சஹ்ரானை ஏவியோரும் செய்த ஈனச் செயலுக்காக நீர் எம்மை மன்னிப்பீராக” என்று கேட்கும் வரை அந்த படுபாத இரத்தக் கறையில் இருந்து எப்படி விடுதலை பெற முடியும்.

யார் செய்தார்கள் என்று தெரியாமலே ஓடோடிச் சென்று இரத்தம் கொடுத்தேன். பின் யார் என்றதன் பின் பல தடவைகள் வீட்டில் மயங்கி மயங்கி விழுந்தேன்.

இவையெல்லாம் அந்த ஆத்மாக்களால் எம்மை மன்னிக்கச் செய்யும் என்று நம்ப முடியவில்லை.

இந்த அகோரச் சிந்தனையும் இந்த வெறியாட்டத்தினை ஏவியோரும் அதை வழி நடத்தியவர்களும் துணை புரிந்தோரும் அதில் ஈடுபட்டோரும் ‘பொசுங்கிய மனிதச் சதை தின்னிகள்’ என்று சபிப்பதைத் தவிர நம்மிடம் வேறு வார்த்தைகள் இல்லை.

அல்லாஹ்வே, இந்த ஈனச்செயலில் பங்கேற்றோரை அழித்து விடு.

Comments