முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார்

🕔 April 16, 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

றிசாட் பதியுதீனின் மற்றொரு சகோதரரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான றிப்கான் பதியுதீனும் சில மாதங்களுக்கு முன்னர், காணி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்