தற்கொலைதாரியை றியாஜ் பதியுதீன் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 April 15, 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், ஈஸ்டர் தின தற்கொலை குண்டுதாரியுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுதாரி ஒருவரை, புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில், ஏப்ரல் 21ஆம் திகதிக்கு நெருக்கமானதொரு நாளில் சந்தித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் இதன்போது மேலும் கூறினார்.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை 119 நபர்களை கைது செய்துள்ளதாகவும், பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) 78 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

தொடர்பான செய்தி: எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்