ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு

🕔 April 14, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று செவ்வாய்கிழமை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போதே, அவரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக, நேரலையில் தோன்றி, தனது கைதுக்கான தன்னிலை விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.

தொடர்பான செய்தி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம்

Comments