கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

🕔 October 27, 2015

Kavikko - 02
– சென்னையிலிருந்து ஹாசிப் யாஸீன் –

விக்கோ அப்துல் ரகுமான் பவள விழா, கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவினை’ மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தொடக்க உரையாற்றி நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவும், கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவும்’ ஒன்றிணைந்த நிகழ்வாக சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.

இருநாள் நிகழ்வாக நேற்றும், இன்றும் நடைபெறும் இவ்விழாவில், இலங்கையிலிருந்து விசேட அதிதிகளாக மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முன்னாள் அமைச்சரும் மு.கா. செயலாளருமான எம்.ரீ. ஹசனலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். அஸ்லம், முத்தலிப் பாவா பாறூக், கல்முனை மாநகரசபை மேயர் நிசாம் காரியப்பர், கம்பவாரிதி. இ. ஜெயராஜ், டொக்டர் தாஸிம் அஹமத் மற்றும் மருதூர் ஏ. மஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றைய விழாவின் தொடக்க உரையினை, அமைச்சர் ரஊப் ஹக்கீம் நிகழ்த்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதேவேளை, பவள விழா காணும் கவிக்கோ அப்துல் ரகுமானை வாழ்த்தி, அமைச்சர் ஹக்கீம் வாசித்த கவிதை சபையோரின் பாராட்டினைப் பெற்றது.

இவ் விழாவின்போது, கவிஞர் பொன். செல்வ கணபதிக்கு 2014ம் ஆண்டுக்கான ‘கவிக்கோ விருது’ வழங்கப்பட்டது. மலேசியாவின் இளைஞர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம். சரவணன் மற்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் இணைந்து, மேற்படி ‘கவிக்கோ விருதினை’ வழங்கி வைத்தனர்.

இவ் விழாவில் திரைப்பட இயக்குநர்களான கே.பாக்கியராஜ், அமீர், சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெறும் இறுதிநாள் நிகழ்வில், கவிக்கோ கவிதை அறக்கட்டளைக்குப் பொற்கிழி வழங்கி, நிறைவுரை நிகழ்த்துவதற்காக திமு.க. தலைவரும் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி கலந்து கொள்கிறார்.Kavikko - 03
Kavikko - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்