‘கொவிட்’, ‘கொரோனா’ என, இரட்டைப் பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பெற்றோர்: என்ன காரணம் தெரியுமா?

🕔 April 4, 2020

ந்திய தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு ‘கொவிட், ‘கொரோனா’ என பெயரிட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் குழந்தைகள் கடந்த வாரம் பிறந்தன.

“மார்ச் 27ஆம் திகதி அதிகாலையில் எனக்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று ஆண், மற்றையது பெண். நாங்கள் அவர்களுக்கு இப்போது கொவிட் மற்றும் கொரோனா என்று பெயரிட்டுள்ளோம்” என குழந்தைகளின் தாய் ப்ரீத்தி வர்மா கூறினார்.

இன்று சனிக்கிழமை காலை 7.00 மணி வரையிலான காலப்பகுதியில், சுமார் 11 லட்சம் பேர் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர்.

“உண்மையில் வைரஸ் ஆபத்தானதும் உயிருக்கு அச்சுறுத்தலானதுமாகும். ஆனால், அது மக்களை சுகாதாரம், சுகாதாரம் மற்றும் பிற நல்ல பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தச் செய்தது” என்றும் குழந்தைகளின் தயார் கூறியதோடு, “அதனால்தான், இந்த பெயர்களைப் பற்றி நாங்கள் சிந்தித்தோம்”. என்றார்.

தமது இந்த முடிவுக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆதரவளித்ததாகவும், குழந்தைகளின் தாயார் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்