கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில், தெ.கி.பல்லைக்கழகத்துக்கு 22 பதக்கங்கள்

🕔 October 25, 2015

Karatte - 0124
– எஸ். அஷ்ரப்கான் –

கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழதிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் 08 தங்கப் பதக்களை வென்றுள்ளனர்.

கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் வருடாந்த மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு 08 தங்கம், 06 வெள்ளி, 08 வெண்கலம் அடங்கலாக 22 பதக்கங்களை பெற்றுக் கொண்டு தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் உறுப்பினரும், தென்கிழக்கு பல்கலைக்கழக போதனாசிரியருமான முஹம்மது இக்பால்  தெரிவித்தார்.

இப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் கலந்து கொண்டார்.Karatte - 0123Karatte - 0125

Comments

புதிது பேஸ்புக் பக்கம்