கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

🕔 February 12, 2020

– நூருல் ஹுதா உமர் –

ல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் இன்று புதன்கிழமை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராவார்.

சபைமுதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்வில் இந்த தெரிவு இடம்பெற்றது.

இவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பு செயலாளராகவும்,கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் செயற்படுகிறார்.

நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பதவி வகித்த போது, அவரின் இணைப்பு செயலாளராகவும் ரஹ்மத் மன்சூர் பதவி வகித்தார்.

இவர் மறைந்த முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் புதல்வராவார்.

மேற்படி பிரதி மேயர் தெரிவின் போது – சபையில் சாய்ந்தமருது சுயேட்சை அணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (மயில்), தேசிய காங்கிரஸ் (குதிரை), தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வில்லை.

Comments