கொரோனாவுக்கான பெயரை, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

🕔 February 12, 2020

புதிதாகப் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு ‘கொவிட் – 19’ (COVID-19) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு இந்தப் பெயரை அறிவித்துள்து.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 108 பேர், இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சுவாசத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம், கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

தொடர்பான செய்தி: கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது

Comments