கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு

🕔 February 11, 2020

– யூ.கே. காலித்தீன் –

ல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றேல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் இந்தக் குண்டு வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாதோரினால் வீசப்பட்ட மேற்படி பெற்றோல் குண்டினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

குண்டு வீச்சு நடைபெற்ற இடத்தில் வைக்கோல் ஏற்றப்பட்ட முச்சக்கர வண்டியொன்று தரித்து நின்றுள்ளபோதிலும், எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.

இது தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments