கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம்

🕔 February 2, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

44 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த நபர் சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்தவர்க என தெரியவந்துள்ளது.

இவர் பிலிபீன்ஸ் தலைநகர் மனிலாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில், கடந்த ஜனவரி 25ஆம் திகதி முதல் சிகிச்கை பெற்று வந்தார்.

Comments