14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை

🕔 January 17, 2020

க்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது.

14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து, இவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

மேலும் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக வழங்குமாறும் உத்தவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பிரதிநிதிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது பாரதூரமான விடயம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, இவ்வாறான செயற்பாடுகளால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போகும் என்றும் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அக்குரஸ்ஸ நகரிலுள்ள வாடி வீடொன்றில் 14 வயது சிறுமி ஒருவரை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், இரண்டு மாதங்களும் 10 நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Comments