கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

🕔 January 16, 2020

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “ரணில் விக்ரமசிங்க 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் மிகச் சிறிய குழுவினரே, ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சித் தலைமைபை் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்; கட்சித் தலைமையில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

கட்சியின் அரசியலமைப்பின் படி, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கு, கட்சித் தலைவரை நீக்கவோ மாற்றவோ அதிகாரம் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்