தலைப்புச் செய்திகள்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படுதல் வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆலோசனைகளை சட்டமா அதிபர் திணைக்களமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.