சீமெந்து விலை குறைகிறது: அமைச்சர் யாப்பா அறிவிப்பு

🕔 December 15, 2019

சீமெந்து விலையினை எதிர்வரும் வாரத்திலிருந்து குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரம் தொடக்கம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வௌிநாட்டில் இருந்து நாட்டுக்கு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் சீமெந்தின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வற் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு சீமெந்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்