ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர்

🕔 October 21, 2015
Kumarasinghe Sirisena - 011னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், டெலிகொம் நிறுவனத்தின் தலைவருமான குமாரசிங்க சிறிசேன, தனக்கு ஒருகோடி ரூபா மாதாந்த சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த அரசிலும் மரக்கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக குமாரசிங்க சிறிசேன பதவி வகித்திருந்தார். 

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன், தனது சகோதரர் குமாரசிங்கவை டெலிகொம் நிறுவனத்தின் தவிசாளராக நியமித்தார்.

டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கான சம்பளமாக ஆரம்பத்தில் இருந்த இரண்டு லட்சம் ரூபாவினை, அண்மையில் முப்பது லட்சம் ரூபா வரை, குமாரசிங்க அதிகரித்துக் கொண்டார்.

டெலிகொம் மற்றும் அதனுடன் இணைந்த மூன்று நிறுவனங்களின் தவிசாளராகப் பதவி வகிக்கும் குமாரசிங்க,  குறித்த நிறுவனங்களிலிருந்து தனக்கு தலா முப்பது லட்சம் ரூபாய் சம்பளமாகவும், ஆறு லட்சம் ரூபாய் வரையில் கொடுப்பனவுகளாவும், கிட்டத்தட்ட ஒருகோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென, பணிப்பாளர் சபைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரருடைய இந்தக் கோரிக்கையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்