நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து

🕔 October 20, 2015

Accident - 0007
– க. கிஷாந்தன் –

ட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற மேற்படி முச்சக்கரவண்டி, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண் ஆகிய இருவரும் படு காயங்களுக்குள்ளான நிலையில், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்கான நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா நானுஓயா பகுதியை சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அவிசாவளை பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பும் வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. Accident - 0009Accident - 0008

Comments

புதிது பேஸ்புக் பக்கம்