வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

🕔 October 28, 2019

னாதிபதி தேர்தலின்போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரைதான் வாக்களிப்புக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சில ஊடகங்களில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரம் நீடிக்கத் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருந்த செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லை. இவ்வாறான எந்தவித ஆலோசனைகளோ அல்லது தீர்மானங்களோ எம்மால் எட்டப்படவில்லை.

எனவே, மக்கள் இறுதி நேரம் வரை காத்திராமல், நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, தத்தமது வாக்குகளைப் பதியு வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்