கிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு

🕔 October 21, 2019

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில், கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியானது Cadet (14/15 years), Junior (16/17 Years), Under 21 Years, Senior (above 21Years) Veteran ஆண்கள், பெண்கள் ஆகிய பிரிவினர்களுக்கு Kata, Kumite, Team Kata ஆகிய நிகழ்வுகளாக நடைபெற்றது.

மேற்படி போட்டியில் கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் பிரதிநிதித்துவம் செய்கின்ற International Martial arts Association (IMA) சங்கம் சார்பாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாகவும் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கம் –23, வெள்ளி – 17, வெண்கலம் – 12 அடங்கலாக மொத்தம் 52 பதக்கங்களை பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.

தேசிய போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்