புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது

🕔 August 28, 2019

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மருதமுனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

பாண்டிருப்பைச் சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என்று, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

இவர் தனியார் நிறுவனமொன்றின் பிரதேச விற்பனை முகாமையாளராகக் கடமையாற்றி வருகின்றார் எனவும் ஊடகவியலாளர் ஷிஹான் குறிப்பிட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி – பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன் கடந்த கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்