தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்; அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பிரேதம்
– மப்றூக் –
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, திடீர் மரணமானார்.
பூண்டுலோயா – டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி. துர்கேஷ்வரன் என்பவரே இவ்வாறு மரணமானதாக தெரிய வருகிறது.
தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் – மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவர் – பல்கலைக்கழகத்திலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது.
மாணவரின் மரணம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.