தலைப்புச் செய்திகள்

ராணுவ தளபதியாக சவேந்திரா சில்வா நியமனம்

இலங்கையின் 23வது ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்த சவேந்திர சில்வா, ராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் ராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.

இந்த நியமனத்தின் போது, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

தொடர்பான செய்தி: ராணுவத் தளபதியின் பதவிக் காலம், நாளை நிறைவு