பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம், 09 மணி நேரம் வாக்கு மூலம்

🕔 July 16, 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 07 மணிவரை குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமையவே, ஹேமசிறியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்